சுன்னாகம் பொலிஸ் பெருங்குற்றப் பிரிவினர் திடீர் இடமாற்றம்!

Saturday, October 27th, 2018

விசாரணைகளை சரியான முறையில் முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றப் பிரிவைச் சேர்ந்த 8 பேர் நேற்று திடீரென இடமாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்ணாண்டோவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்ணாண்டோவினால் யாழ்ப்பாண மாவட்டத்துக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் பெருங்குற்றப் பிரிவினர் அவர்களுடைய பிரிவுக்குரிய குற்றச் செயல்களை உரிய வகையில் விசாரணைகளை முன்னெடுப்பது இல்லை. பல விசாரணைகள் முடிவடையாமல் இருப்பதால் 8 பேரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts: