சுன்னாகம் பகுதியில் மூன்று கடைகள் தீக்கிரை!

Sunday, September 24th, 2017

யாழ்.சுன்னாகம் பகுதியில் மின் ஒழுக்கினால் மூன்று கடைகள் தீக்கிரையாகியுள்ளது.

இந்த தீ விபத்து இன்று இரவு இடம்பெற்றுள்ளது.
யாழ்.சுன்னாகம் சந்திப் பகுதியில் உள்ள இலத்திரனியல் கடையில் ஏற்பட்ட மின் ஒழுங்கின் காரணமாகவே தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
கடையில் ஏற்பட்ட தீயினால் அருகில் இருந்த இரு கடைகளுக்கும் தீ பரவியுள்ளது.
ஒரு புடவை கடை மற்றும் நகை கடை மீதும் தீ பரவியது உள்ளது.
 தீ அணைப்பு படையினர் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், தீ விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts: