சுதந்திர தினம் இம்முறை தேசிய தினமாக கொண்டாடப்படவுள்ளது!

Thursday, January 24th, 2019

நாட்டின் 71 ஆவது சுதந்திர தினம் இம்முறை தேசிய தினமாக கொண்டாடப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் முதலாவது அத்தியாயத்தின் 8 ஆவது உறுப்புரையில் தேசிய தினம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டு அரசமைப்பில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவால் தேசிய தினம் அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 1972ஆம் ஆண்டு அரசமைப்பிலோ வேறு எந்த அரசமைப்பிலோ சுதந்திர தினம் என்று தேசிய தினம் குறித்து அவர் விபரித்தார்.

Related posts: