சுங்க தொழிங்சங்க போராட்டம் தொடர்கின்றது!

Monday, February 4th, 2019

சுங்க தொழிற் சங்கங்கள் ஆரம்பித்துள்ள, தொழிற்சங்க நடவடிக்கைகள் இன்றும் தொடர்கிறது.

சுங்க பணிப்பாளர் நாயகத்திற்கு திடீரென இடமாற்றம் வழங்கி, அந்த பதவியில் ஓய்வு பெற்ற முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிணைந்த சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

சுங்க அலுவலக ஊழியர்கள் சங்கம், சுங்க அதிகாரிகள் சங்கம், சுங்க உத்தியோகத்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

எனினும் அரசாங்கம் தமது போராட்டம் தொடர்பில் உரிய தீர்வை வழங்காமை காரணமாக இன்று 6வது நாளாகவும் போராட்டம் தொடர்வதாக, சுங்க தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, சுங்க தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தாம் பெறும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக, புறக்கோட்டை அத்தியவசிய பொருட்கள் மொத்த விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன் காரணமாக நாளைய தினம் கடையடைப்பில் ஈடுபடப்போவதாக, மொத்த வர்த்தக மற்றும் அத்தியவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: