சுங்க அதிகாரிகள் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானம்!

Monday, September 19th, 2016

உத்தேச சுங்க சட்டமூலத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் நாடு முழுவதிலும் உள்ள சுங்க அதிகாரிகள் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

நேரத்திற்கு வேலை என்ற அடிப்படையிலான தொழிற்சங்கப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கையினால் விமான நிலையம், துறைமுகம் மற்றும் நாடு முழுவதிலும் காணப்படும் ஏற்றுமதி, இறக்குமதி பிரிவுகளின் பணிகள் கால தாமதமடையக் கூடும் என ஸ்ரீலங்கா சுதந்திர சுங்கத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பி. விஜேகோன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் எமக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது. புதிய சுங்க சட்டமூலம் தொடர்பில் பேச்சுவார்த்தையொன்று வழங்கப்படும் வரையில், அமைச்சருடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது.

சுங்கப் பணிப்பாளர் நாயகமும், சுங்க அதிகாரிகளை பிழையாக வழிநடத்தி இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்.உத்தேச சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள விரும்புகின்றோம். அதுவரையில் நேரத்திற்கு வேலை என்ற அடிப்படையில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

65i85

Related posts: