சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வவுனியாவில் திறப்பு!

Saturday, September 30th, 2017

வவுனியா வைத்தியசாலை வளாகத்தினுள் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையை சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன திறந்துவைத்துள்ளார்..

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரால் குமுது பெரேராவின் வழிக்காட்டலின் கீழ் 2ஆவது பொறியியலாளர் சேவை படையினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள பணிமனை அண்மையில் பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந்த கட்டட நிர்மாண பணிகளுக்காக ஜெனீவா மற்றும் சுவிஸ்லாந்து நாடுகள் நிதி உதவி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்விற்கு சுகாதார அதிகாரிகள் மற்றும் 21ஆவது படைப்பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரால் டபிள்யூஆர்பி சில்வா மற்றும் பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.

Related posts: