சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது முகக்கவசங்கள் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் – சுகாதார தரப்பினரிடம் யாழ்ப்பாண நலன்விரும்பிகள் கோரிக்கை!

Wednesday, April 22nd, 2020

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது பொது வெளிகளில் விற்பனை செய்யப்படும் முகக்கவசங்கள் மக்களுக்கு ஆபத்துக்களை விழைவிக்கும் அபாயங்கள் காணப்படுவதால் அத்தகைய முறைதவறிய விற்பனைகளை தடைசெய்து மக்களுக்கு சுகாதாரம் மிக்க முகக்கவசங்கள் கிடைக்க வழிவகை செய்ய யாழ் மாவட்ட சுகாதார தரப்பினர் நடவடிக்கைகள் மேற்கொள் வேண்டும் என சமூக அக்கறையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் சுகாதார தரப்பினரது ஆலோசனைககளுக்கு அமைய முகக்சவசங்களை அணிந்துகொள் வேண்டும் என உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளிலும் பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்தும் வருகின்றனர்.

தற்போதைய சூழலில் முகக்கவசங்களின் தேவை அதிகரித்துச் செல்லும் நிலையில் அதை கொள்வனவு செய்வதற்காக யாழ்ப்பாணத்து மக்கள் அதிகளவில் முகக்கவசம் அணிந்தால்ட சரி என்ற மனோபாவத்துடன் பொது வெளிகளில் விற்கும் வியாபார நிலையங்களை நோக்கியே அதிகளவில் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் குறித்த முகக்கவசங்களை வீதியோரங்களிலும் பெட்டிக் கடைகளிலும் பரவலாக பொது வெளிகளில் விற்கப்படுகின்றது. குறிப்பாக வீதியோரங்களில் சுகாதார விதிமுகளைய பின்பற்றாது பொதியிப்படாது தூசுகளும் மணல் திட்டுக்களும் படிந்த நிலையிலேயே முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையால் பொது வெளியில் விற்பனையாகும் முகக்கவசங்களை வாங்கி அணியும் மக்களுக்கு கொரோனா மட்டுமல்லாது வேறு பல தொற்று நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது..

எனவே இவ்வாறான தரம் குறைந்த விற்பனைகளை இனங்கண்டு அவற்றை தடைசெய்ய வேண்டும் என்பதுடன் மக்களை சுகாதாரம் மிக்க முகக்கவசங்களை மக்கள் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யுமாறும் சுகாதாரத் தரப்பினரிடம் யாழ்ப்பாண நலன்விரும்பிகனள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: