சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றாவிடின் மற்றுமொரு கொத்தணி உருவாகும் – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!
Saturday, December 11th, 2021நாட்டில் கொவிட் பரவல் நிலைமை தற்போது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றமையால், அதனை தொடர்ந்தும் பேணும் வகையில் எதிர்வரும் பண்டிகை காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லையேல் பண்டிகை கொத்தணி என்ற மற்றுமொரு கொவிட் கொத்தணி உருவாகக்கூடும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், இதுபோன்ற ஒரு நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு பொது மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கட்டுப்பாடின்றி செயற்பட்டால் அதன் விளைவுகள் விபரீதமாக அமையலாம் எனவும், தற்போதுள்ள சாதாரண வாழ்க்கை நிலை பாதிக்கப்படலாம் எனவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே
சில நாடுகளுக்கான பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அதிகாரசபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த பயணத்தடையை நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்கா, நமீபியா, சிம்பாம்வே, பொட்ஸ்வானா, லெசொத்தோ, சுவிட்ஸர்லாந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|