சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நீடித்தால் பாரிய விழைவு ஏற்படும் – சுகாதார பிரிவு எச்சரிக்கை!

பொது சுகாதார பரிசோதகர்கள் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரண மாக கொரோனா நோயாளிகளைக் கண்டுபிடித்தல், தனிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதில் பாரிய சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா நோயாளிகளை கண்டுபிடிப்பதற்கும், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்துவதற்கும் மற்றும் டெங்கு நோய் பரிசோதனைக்காக வீடுகளுக்குச் செல்லும் நடவடிக்கை, நுளம்பு பெருகும் இடத்தை நடத்திச் செல்பவர்களுக்கு எதிராகச் சட்ட நட வடிக்கை மேற்கொள்ளுதல் உட்பட பல்வேறு நடவடிக்கை கள் இது வரையில் தடைப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளார்.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கை நீடித்தால் நாட்டில் பாரிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மனித உரிமை விடயத்தில் முன்னேற்றம் இருப்பினும் சவால்கள் உள்ளன!
எச்சரிக்கை நீடிப்பு!
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தீர்மானங்களுக்கு அமைச்சரவை அனுமதி!
|
|