சுகாதார நடைமுறைகளை மீறி பூசை வழிபாடு – வடமராட்சியில் சீல் வைக்கப்பட்டது ஆலயம்!

Sunday, November 1st, 2020

யாழ்ப்பாணம் வடமராட்சி – கம்பர்மலை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி வழிபாடுகள் நடத்தியதால் ஆலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அத்துடன், பூசகர் மற்றும் பூசையில் கலந்துகொண்டிருந்த பக்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆலய பூசை வழிபாடு இடம்பெற்ற நிலையில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமையினால் சுகாதார பிரிவினர் ஆலயத்திற்கு சீல் வைத்தனர். அத்துடன் ஆலயத்திற்குள் 14 நாட்கள் யாரும் உள்நுழையவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலு ஆலய பூசகர் மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்ட பக்தர்கள் தத்தமது வீடுகளில் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: