சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் யாழ்.நகரில் மூடப்பட்டது திரையரங்கு!

யாழ்.நகரில் சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் திரையரங்கு ஒன்றை சுகாதார பிரிவினர் முடக்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள திரையரங்கே இவ்வாறு இன்று நண்பகல்முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது.
நாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியிருந்தது.
எனினும் யாழ்ப்பாணம் நகரில் மூடப்பட்ட திரையரங்கு முழுமையான இருக்கைகளுக்கு பார்வையாளர்களை அனுமதித்து ரிக்கெட்டுக்களை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் ரிக்கெட்டுக்களை இணையத்தில் விற்பனை செய்ய அறிவுறுத்தியும் அதனை மீறியமை தொடர்பிலேயே குறித்த திரையரங்கு மூடப்பட்டதாக சுகாதாரத் துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் பிறப்பு வீதம் அதிகரிப்பு - சுகாதாரத் திணைக்களம் தகவல்!
அரசியல் கைதிகள் 27 பேர் விரைவில் விடுவிக்கப்படுவர் - நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
கடந்த 2 ஆண்டுகளில் முகக் கவசம் கொள்வனவு செய்ய இலங்கை மக்களால் 18 ஆயிரம் கோடி செலவு!
|
|