சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற சந்நிதியான் இரதோற்சவம்!

Saturday, August 21st, 2021

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ இரதோற்சவம் இன்று காலை 9 மணியளவில் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று உள்வீதியில் முருகப்பெருமான் சிறிய தேரில் வலம் வந்து சிறப்பாக இடம்பெற்றது.

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாடுபூராகவும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சினால் ஆலயங்களுக்கு என வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களோடு சிறப்பாக தேர் உற்சவம் இடம்பெற்றது.

000

Related posts: