சுகாதார நடைமுறைகளை கண்காணிக்க மன்னாரில் விசேட குழு – மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி தெரிவிப்பு!

Friday, June 25th, 2021

சுகாதார நடைமுறைகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்கின்றார்களா என்பதை அவதானிக்க குழுவொன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களைக் கொண்ட குறித்த குழு உறுப்பினர்களுக்கு, பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் செயற்பாட்டை முன்னெடுக்க ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் றோய் பீரிஸ் தலைமையில் குறித்த பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில், மன்னார் பேருந்து தரிப்பிட பகுதியில் தமது பணியை குறித்த குழுவினர் ஆரம்பித்திருந்தனர்.

மேலும் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் குறித்த இளைஞர் குழுவினரால் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: