சுகாதார தொண்டர்களுக்கான மீள் நோ்முகத்தோ்வு 17ம்இ 18ம் திகதிகளில்!

Friday, September 13th, 2019


வடமாகாண சுகாதார தொண்டா்கள் நியமனம் நிறுத்தப்பட்ட நிலையில்இ புதிதாக உள்ளீா்ப்பு செ ய்வதற்கான மீள் நோ்முகத்தோ்வு எதிர்வரும் 17ம் 18ம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக எந்தக் கொடுப்பனவும் இன்றி பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களை நிரந்தரமாக்குவதற்காக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பல முயற்சிகள் மேற்கொண்டு அதன் பிரகாரம் சுகாதார ஊழியர் நியமனத்திற்காக அனுமதி பெறப்பட்டது.

இவ்வாறு பெறப்பட்ட அனுமதியும் க.பொ.த சாதாரண தரம் கோரப்பட்ட நிலையில் அதன் கல்வித் தரத்தை குறைப்பதற்கான அனுமதியும் பெறப்பட்ட நிலையில் நியமனத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன.

இந்த நிலையில் நேர்முகப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நேர்முகப் பரீட்சை இடம்பெற்றவேளையில் தவற விடப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் சிலர் இணைக்கப்படுவதாக கூறப்பட்டபோதும் இறுதியில் 2 ஆயிரத்து 2 பேர் நேர்முகத் தேர்வில் தோற்றினர்.

இந்த நிலையில் நேர்முகத் தேர்வின்போது வழங்கப்பட்ட சேவை கடிதங்களிற்கு ஆண்டு அடிப்படையிலும் கோரப்பட்ட கல்வித் தகமைக்கு மேலதிக கல்வித் தகமைகளிற்கு மேலதிக புள்ளிகளும் இட்டமையினால் உண்மையாக நீண்டகாலம் பணியாற்றியவர்கள்

பாதிக்கப்பட்டு அண்மையில் பட்டியலில் இடம்பிடித்தவர்களிற்கு நியமனம் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டது. இவ்வாறு நேர்முத் தேர்வின் மூலம் தெரிவானவர்களிற்கு கடந்த 5ம் திகதி நியமனம் வழங்கவிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட தொண்டர்கள் நடாத்திய போராட்டத்தின் காரணமாக நியமனம் நிறுத்தப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே மீண்டும் தேர்முகத் தேர்வு எதிர்வரும் 17 18ம் திகதிகளில் நேர்முகத் தேர்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: