சுகாதார துறையினரின் ஆலோசனை அடிப்படையில் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

Tuesday, May 19th, 2020

சுகாதார துறையினரின் ஆலோசனை மற்றும் அறிக்கைகளை பெற்று உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்துக் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜனாதிபதி தேர்தலின் பின் ஊடக சந்திப்பொன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட முதல் சந்தர்ப்பம் இது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: