சுகாதார தர பாதுகாப்பு தொடர்பில் தொலைக்காட்சி நாடகம்!

Monday, June 12th, 2017

சுகாதார சேவையின் தரத்தை பாதுகாப்பது தொடர்பான தொலைக்காட்சி நாடகம் ஒன்று இன்று கொழும்பு காசல் சுகாதார தர பாதுகாப்பு பிரிவில் வெளியிடப்படவுள்ளது.

சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனரத்ன தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வு ‘செனெஹசின் சுவதானய’ என்ற பெயரில் இடம்பெறவுள்ளது.

இதன்மூலம் சுகாதாரப்பிரிவில் பணியாளர்கள் பெருந்தன்மையுடன் தமது சேவையை முன்னெடுக்கும் விடயங்கள் காட்சிப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் பொதுமக்கள் சுகாதாரம் தொடர்பான பிரதிப்பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் திருமதி லக்ஸ்மி சோமதுங்க தெரிவித்தார். அனைத்து வைத்தியசாலைகளுக்கும் இதன் பிரதி வழங்கப்படவுள்ளன.

Related posts: