சுகாதார தரப்பினரின் விதிகளை பின்பற்றி மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – சுகாதார அமைச்சு!

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியை கொரோனா தடுப்பிற்காக அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சட்ட திட்டங்களுக்கு அமைய மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரியை அரச மரியாதையுடன் நாளை மாலை கொட்டகலை, நோர்வுட் மைதானத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இதற்காக குறைந்த அளவிலான மக்களை மாத்திரம் இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு இந்த விடயத்தை ஆறுமுகம் தொண்டமானின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நுவரெலியா மாட்ட செயலாளருக்கும் அறிவித்துள்ளது.
ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரியைக்காக நோர்வுட் மைதானத்தில் பாரிய அளவிலான மக்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய சுகாதார அமைச்சு இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
Related posts:
பிரித்தானிய பிரதமர் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று!
எதிர்வரும் திங்கள்முதல் சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - இ...
படுகொலை செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி - இலங்கையில் நாளை தேசிய துக்க தினமாக அறிவ...
|
|