சுகாதார தகவல்கள் தொடர்பில் தேசிய கொள்கை!

Friday, July 7th, 2017

சுகாதாரத் தகவல்கள் தொடர்பில் தேசியக் கொள்கையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச தலைமையில் சுகாதார அமைச்சில் நேற்று காலை வெளியிடப்பட்டது.

சுகாதாரத் தகவல்கள் தொடர்பில் தகவல்களைப் பயன்படுத்துதல், நிர்ணயித்தல், மற்றும் அதற்கான தரவுகள் மற்றும் தகவல் முகாமைத்துவம் இலத்திரனியல் சுகாதாரம் தொடர்பான விடயங்கள், தரவுகள் மற்றும் தகவல்களைப் பயன்படுத்தும் போது தனியார் தன்மை, இரசாயனம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் இந்த தேசிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச, நாடு முழுவதிலுமுள்ள 20 வைத்தியசாலைகளின் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான மத்திய நிலையமொன்று ஏற்படுத்தப்படுமென்று தெரிவித்தார். அத்துடன் வைத்தியர்களுக்கு மத்தியில் தொடர்புகளுக்கான வலைப்பின்னலும் ஏற்படுத்தப்படும் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: