சுகாதார சேவை மேம்பாட்டிற்கு கியூபா ஒத்துழைப்பு!

Tuesday, May 1st, 2018

நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்த கியூபா அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

கியூபாவில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டுள்ள சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜிதசேனாரத்னவை சந்தித்த கியூபாவின் சுகாதாரஅமைச்சர் ரொபேற்றோ மொராலே இதனைத் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது கியூபாவில் உற்பத்தி செய்யப்படும் ஒளடதங்கள், உபகரணங்களை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

நாட்டின் பொருளாதாரத்தை சரியான முறையில் நிர்வகிக்க விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட வேண்டும் - இராஜாங்...
இலங்கையில் ஒரு கோடியே 18 இலட்சத்து 241 பேருக்கு தடுப்பூசி பெற்றுள்ளனர் - தொற்றுநோயியல் பிரிவு அறிவிப...
சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்தால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் - 'ஜனாதிபதி கொடி' - 'அ...