சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து!

Sunday, December 11th, 2016

டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பை கவனத்திற்கொண்டு டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 30 சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை சுகாதார அமைச்சு அறிக்கையொன்றினூடாக வெளியிட்டுள்ளது.

அதற்கமைய யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, இரத்தினபுரி புத்தளம், களுத்துறை, கம்பஹா, குருணாகல், காலி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

dengu_1

Related posts: