சுகாதார சேவைகள் சீர்குலைவதை தவிர்க்க யோசனைகள் முன்வைத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !

Sunday, July 19th, 2020

பொதுத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுகாதார சட்டத்திட்டங்களில் தமக்கு சட்ட ரீதியான அதிகாரங்களை வழங்காமை மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொது சுகாதார பரிசோதகர்கள் தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சுகாதார சேவைகள் சீர்குலையாமல் இருக்கும் வகையில் செயற்படுவதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சரிடம் யோசனைகளை முன்வைத்துள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரிகள் மேற்கொண்டு வரும் சேவையை மேலும் வினைதிறனாக நிறைவேற்றுவதற்காக அனைத்து வசதிகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முதலாவது யோசனையை முன்வைத்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் தேவையான பிரதேசங்களுக்கு அதிகளவான மருத்துவர்களை சேவையில் ஈடுபடுத்துவது, கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு மேலதிகமாக அவர்களுக்கு தேவையான மனிதவளத்தை பெறுவதற்கான மாற்று வழியை கண்டறிந்து, சுகாதார வைத்திய அதிகாரிகளின் நேரடியான கண்காணிப்பு மற்றும் ஆலோசனைகளுக்கு அமைய அவர்களை உடனடியாக சேவையில் இணைந்துக்கொள்ள வேண்டும் என்பது இரண்டாவது யோசனை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: