சுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றார்!

இலங்கையின் சுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் நாயகமாக அசேல குணவர்தன தனது கடமைகளை இன்று பொறுப் பேற்றுக் கொண்டார் .
சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற விழாவைத் தொடர்ந்து இன்று 29 ஆம் திகதி வியாழக்கிழமை காலை புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
குறித்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னி யாராச்சியும் கலந்து கொண்டார்.
முன்பதாக முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன புதிய சுகாதார சேவைகள் பணிப் பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 24வது நினைவு தின வைபவம்!
கச்சதீவுத்திருவிழாவில் பொலித்தீனுக்குத் தடை - யாழ் அரச அதிபர் !
அச்சிடும் பணிகளில் முறைக்கேடுகள் இடம்பெறவில்லை - பாடப்புத்தக சர்ச்சை தொடர்பில் கல்வி அமைச்சர் !
|
|