சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

Wednesday, October 25th, 2017

சுகாதார சேவை ஊழியர்களின் ஒன்றிணைந்த அடையாள வேலை நிறுத்தமொன்று எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2015ஆம் ஆண்டு சுகாதார சேவையை விட கீழ் நிலையில் இருந்த அரச சேவைகளின் பணியாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிய அமைச்சரவை சுகாதார சேவை ஊழியர்களுக்கு இதுவரை சம்பள அதிகரிப்புக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 26ஆம் திகதி அனைத்து ஊழியர்களையும் இணைத்துக்கொண்டு அடையாள வேலை நிறுத்தமொன்றை முன்னெடுக்க உத்தேசிக்கபட்டுள்ளது.

இந்த நிலையில் 26ஆம் திகதி காலை 7 மணி தொடக்கம் 27ஆம் திகதி காலை 7 மணி வரையான ஓர் அடையாள வேலைநிறுத்தம் தொடர்பில் சுகாதார சேவைகள் ஊழியர் சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.மேலும், இந்த காலப்பகுதியில் அரச மருத்துவமனைகள் உள்ளிட்ட எந்தவொரு சுகாதார சேவைகளும் இடம்பெறாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: