சுகாதார அமைச்சு முழுமையாக அனுமதி கொடுத்தால் நாளைமுதல் போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பும் – போக்குவரத்து அமைச்சர்!

Monday, May 25th, 2020

சுகாதார அமைச்சு முழுமையாக அனுமதி கொடுத்தால் நாளை 26 ஆம் திகதிமுதல் மக்கள் போக்குவரத்துச் சேவையை வழமைக்கு கொண்டுவர தயாரென பயணிகள் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் நிலைமை கட்டம் கட்டமாக சீராகி வரும் நிலையில் மக்கள் போக்குவரத்துச் சேவையை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து அமைச்சு தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநேகமாக 26 ஆம் திகதிக்குப் பின்னர் நாடு வழமைக்குத் திரும்புமென எதிர்பார்க்கின்றேன். சுகாதார அமைச்சு முழுமையாக அனுமதி தந்தால் போக்குவரத்துச் சேவை வழமைக்குத் திரும்பும்.

அதன்படி மாகாணங்களுக்கிடையில் போருந்து போக்குவரத்து முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை போக்குவரத்துச் சேவை வழமைக்குத் திரும்பினாலும் பேருந்து மற்றும் ரயில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற பயணிகள் மட்டுமே அதில் பயணிக்க அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் போன்று அளவுக்கதிகமான பயணிகளை பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்க அனுமதிக்க முடியாது.

நிலைமை வழமைக்குத் திரும்பினாலும் சுகாதார விதிமுறைகளை பயணிகள் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும். இதனை கண்காணிக்கும் பொறுப்பினை போக்குவரத்து பொலிஸார் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம், என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: