சுகாதார அமைச்சு அனுமதி மறுப்பு – மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகளை முன்னெடுப்பதில் மேலும் தாமதம் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதால், வழமையான பேருந்து சேவையை முன்னெடுப்பதும் தொடர்ந்து பிற்போடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் இருந்தாலும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணம் விட்டு மாகாணம் செல்லும் மக்களை ஏற்றிச் செல்லும் சில பேருந்துகள் அதிகளவான பணத்தை வாங்குவதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலேயே, அத்தியாவசிய சேவைகளுக்காக குறைந்தளவிலான பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், சுகாதார அமைச்சின் அனுமதி இல்லாததால், மாகாணங்களுக்கு இடையேயான வழமையான பேருந்து சேவைகள் தொடங்குவது மேலும் தாமதமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புகையிரத சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|