சுகாதார அமைச்சின் ஊடாக விஷேட செயலணி – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Thursday, December 16th, 2021

இரசாயன உரங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக விசேட செயலணியொன்றை அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை அடுத்த வாரத்திற்குள் ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த செயலணிக்கு சுகாதாரதுறை உட்பட பல துறைகளைச் சேர்ந்த சுயேச்சையான குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும், அதற்காக விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டுமெனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: