சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் கல்வியமைச்சின் செயற்பாடுகள் ஆரம்பம். – கல்வி அமைச்சு!

Monday, May 11th, 2020

கொரோனா தொற்று பாதுகாப்பு தொடர்பில் சுகாதார அமைசை்சின் அனைத்து விதமான அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பத்தரமுல்லவில் அமைந்துள்ள கல்விமைச்சின் செயற்பாடுகள் இன்றையதினம் ஆர்பிக்கப்பட்டன.

கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெருமவின் அறிவுறுத்தலுக்கு அமைய சேவைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் வருகை தந்திருந்திருந்ததாகவும் கல்வி அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் சுகாதார அமைச்சு வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஊழியர்களின் சுகாதார பாதுகாப்புக் கருதி அதற்கான உபகரணங்கள் அனைத்தும் அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: