சுகாதார  அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கௌரவிப்பு!

Wednesday, June 21st, 2017

சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவிற்கு இலவச சுகாதார சேவைக்காக ஆற்றிய பணிகளை கௌரவிக்கும் வகையில் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற அரசாங்க மருந்தாளர்கள் சங்கத்தின் 60ஆவது நிறைவாண்டு நிகழ்வில் மருந்தாளர் சங்கத்தினரால் இந்த கௌரவிப்பு இடம்பெற்றது.

இதன் போது உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன ,மருந்தாளர்களுக்கான தனியான பீடத்தை அமைக்க ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாகவும் மருந்தாளர் பேரவை ஒன்றும் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Related posts: