சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – எதிர்வரும் 8 ஆம் திகதி மாலை 5.30 க்கு பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் அறிவிப்பு!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்று வருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குறித்த பிரேரணையை இன்று நாடாளுமன்றில் முன்வைத்திருந்தார்.
நாட்டில் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, தரமற்ற மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி சுகாதார அமைச்சருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணையை முன்வைத்துள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான விவாதம் இன்று மூன்று தினங்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 8 ஆம் திகதி மாலை 5.30க்கு பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இ.போ.ச பணியாளர்களின் விடுமுறைகள் இரத்து!
அணு உற்பத்தி நிலையம் தொடர்பிலும் விவாதம் இடம்பெறலாம்..!
நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க தற்காலத் தலைவர்கள் மட்டுமல்ல எதிர்காலத் தலைவர்களும் முன்னிற்க வேண்டு...
|
|