சுகாதாரப் பிரிவை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் தபால்மூல வாக்களிப்பிற்கு தேர்தல்கள் ஆணையகம் ஒப்புதல்!
Thursday, June 4th, 2020நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுகாதார சேவைகள் பிரிவை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் தபால் மூல வாக்களிப்பினை வழங்க தேர்தல்கள் ஆணையகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அத்துடன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 10 ஆம் திகதி பிற்பகல் 12 மணிக்கு முதல் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திற்காக பயன்ப்படுத்தப்படும் மற்றும் சுற்றுலா பயணங்களுக்காக பதிவு செய்யப்பட்ட பேருந்துக்களை தேவை ஏற்ப்பட்டால் மாத்திரம் பொது போக்குவரத்திற்காக பயன்ப்படுத்தலாம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டதனை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றி ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ற அளவிலேயே ஆட்களை ஏற்றி செல்ல முடியும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|