சுகயீன விடுமுறை – அஞ்சலகங்களில் குவிந்த ஆசிரியர்கள் – பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு!

Monday, April 25th, 2022

ஆசிரியர் – அதிபர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் இன்றைய சுகயீன விடுமுறையை முன்னிறுத்தி ஆரம்பித்துள்ள போராட்டம் காரணமாக பல பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.

ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருகை தராமையினால் பல பாடசாலைகளின் மாணவர்கள் மீண்டும் வீட்டுக்கு திருப்பி அனுப்பபட்டதையும் அவதானிக்க முடிந்தது.

ஆசிரியர்கள் அஞ்சல் காரியாலயங்களுக்கு சென்று தந்தி சேவை ஊடாக விடுமுறை விண்ணப்பங்களை பூர்த்தி செய்தமையை அவதானிக்க கூடியதாக இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

எரிபொருள் இன்மையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முன்பதாக பாடசாலை நடவடிக்கைகள் இன்று (25) வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தார்.

பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டிருந்த போதிலும், ஆசிரியர்கள் இன்று பாடசாலைகளுக்கு வருவார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் கூறியிருந்தார்.

தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுப்பது ஆசிரியர்களின் உரிமையென்றாலும் பாடசாலை மாணவர்களை கருத்திற்கொண்டு இன்றைய தினம் பாடசாலைகளுக்கு சமுகமளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக கல்வி அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தரைம குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வீதி செப்பனிடல் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பால...
சமூக வலைதளங்கள் மற்றும் சைபர் செயற்பாடுகளை கட்டப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - ஜனாதிப...
முச்சக்கர வண்டிகளில் கட்டண மீற்றர் பொருத்தும் திட்டம் பெப்ரவரி 01 முதல் ஆரம்பம் - அளவீட்டு அலகுகள்,...