சுகபோகங்களுக்கு அடிபணியாத தலைவர் டக்ளஸ் தேவானந்தா – முடியப்பு றெமீடியஸ்!

Tuesday, June 30th, 2020


பல வருடங்களாக அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் போல் சொத்து சுகங்களுக்கு அடி பணியாத தலைவராக இருந்துள்ளார் என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளரும் சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .அவர் மேலும் தெரிவிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தமிழ் மக்களுடைய அபிவிருத்தி மற்றும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் அன்றிலிருந்து இன்றுவரை பல்வேறு அபிவிருத்திகளை செய்துள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் மற்றும் உறுப்பினர்கள் எமது கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த காலங்களில் சொத்து சுகங்களுக்கு அடிமையாக்கியது கிடையாது. மக்கள் மக்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்திடம் பேரம்பேசி அபிவிருத்திகளை மக்களுக்காகவே பெற்று வந்தோம் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ரணில் அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக தமிழ் மக்களை பலிகடா ஆக்கி பல்வேறு சலுகைகளைப் பெற்றார்கள்.
மக்களை உசுப்பேத்தி வாக்குகளை பெற்றுவிட்டு ஐந்து வருடங்களாக மக்களைப் பற்றி சிந்திக்காத கூட்டமைப்பினர் தற்போது தேர்தல் காலத்தில் மட்டும் மக்களிடம் எவ்வாறு வாக்குகளை அபகரிப்பது என தெரியாது பொய்களை உரைக்கத் தொடங்கியுள்ளன.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களின் அபிவிருத்தி மற்றும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் அன்றிலிருந்து இன்றுவரை ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகிறார் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இந்தியா சென்ற குழுவில் அங்கம் வகித்த டக்ளஸ் தேவானந்தா இந்தியப் பிரதமரிடம் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பில் வலியுறுத்தினார்.
இச்சந்திப்பில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது வடக்கின் பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நியமித்துள்ளதாக இந்திய பிரதமருக்கு எடுத்துக் கூறியதுடன் அவர் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை கையாள உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ் மக்களிடம் ராஜபக்சக்களை வெறுப்படைய வைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எவ்வாறு அவர்களுடன் இணைந்து செயற்படப் போவதாக கூறுவர்.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை அழித்த அமெரிக்காவை தனது நேச நாடாக ஏற்றுக்கொண்டதன் விளைவே இன்று ஜப்பான் தொழில்நுட்ப வளர்ச்சியில் முதன்மை நாடாக விளங்குகிற து . வடக்குமாகாணசபையை கைப்பற்றுவதற்காக தமிழ் மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டுமென கோஷமிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று பல கூறுகளாகப் பிரிந்து உள்ளனர்.
தமது கட்சிக்குள் ஒற்றுமையை வெளிப்படுத்த முடியாதவர்களும் கூட்டமைப்புக்குள் ஒற்றுமையை வெளிப்படுத்த முடியாதவர்களும் எவ்வாறு மக்களின் பிரச்சினைகளை கையாளப் போகிறார்கள். ஆகவே தமிழ் மக்கள் தெளிவானதும் தூரநோக்கு சிந்தனையுடன் செயற்படுகின்ற டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட ஆசனங்கள் மூலம் பாராளுமன்றம் செல்ல வழியமைத்துக் கொடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: