சீ.எஸ்.என் அலைவரிசை பணிப்பாளரை கைது செய்ய இன்டர்போலின் உதவி !
Friday, August 4th, 2017சீ.எஸ்.என் அலைவரிசையின் பணிப்பாளராகவும் நிறுவனத்தின் பங்குதாரராகவும் கடமையாற்றிய காடியா கருணாஜீவ என்ற பெண் சந்தேக நபரை கைது செய்ய இன்டர்போலின் உதவி நாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீ.எஸ்.என். அலைவரிசையில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்றைய தினம் நடைபெற்றது.
இதன் போது காடியாவிற்கு எதிராக இன்டர்போல் ஊடாக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவினர், கடுவெல நீதிமன்றிடம் கோரியுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித ராஜபக்ச உள்ளிட்டவர்கள் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
காடியா தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது எனவும், இன்டர்போலின் உதவியுடன் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும் எனவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு கோரியுள்ளது.சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக இதற்கு முன்னர் அவரது சட்டத்தரணிகள் அறிவித்திருந்தனர்.
எனினும், இதுவரையில் குறித்த சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை. பிடிவிராந்து உத்தரவு பிறப்பிப்பது குறித்து எதிர்வரும் 10ம் திகதி தீர்மானிக்கப்படும் என கடுவெல நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Related posts:
|
|