சீருடை வவுச்சர்: பாடசாலை அதிபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

மாணவர்களுக்கான இலவச சீருடைகளுக்காக வழங்கப்படுகின்ற உறுதி சீட்டை மாணவர்களுக்கு வழங்காது, வர்த்தக நோக்கில் செயல்படும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசம் எச்சரித்துள்ளார்.
சில கல்வி வலயங்களில் பாடசாலை சீருடைக்காக வழங்கப்படுகின்ற உறுதிச் சீட்டிற்கு பதிலாக சீருடைத்துணிகள் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், சில பிரதேசங்களில் சீருடைகளை பெற்றுக்கொடுப்பதற்கு, வர்த்தகர்களுக்கு பகுதி பகுதியாக பிரித்துக் கொடுக்கப்பட்டதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன
இது குறித்து முக்கிய அவதானம் செலுத்தியுள்ள கல்வி அமைச்சர், இவ்வாறான எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
அதிபர்கள் வர்த்தக நிலையங்களை போசிப்பது முற்றுமுழுதாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
நாட்டில் ஒட்சிசன் தேவைப்பாடு அதிகரித்துள்ளது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!
யாழ் நகரப் பகுதிகளில் விசேட பொலிஸார் ரோந்து நடவடிக்கை!
சீரற்ற காலநிலை - யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிப்பு - மாவட்ட அனர்த்த மு...
|
|