சீருடை வவுச்சர்கள் அடுத்த வாரம்!

மாணவர்களின் சீருடைக்கான வவுச்சர் பாடசாலை மட்டத்தில் விநியோகிக்கும் பணி அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படுமென்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடாபாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ஊழல் முறைகேடுகள் இல்லாதொழிக்கப்பட்டு சவாலுக்கு மத்தியில் கல்வியின் மேம்பாட்டுக்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். கல்வி நடவடிக்கைகள் வெற்றிபெறுவதற்காக வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை 35 அல்லது 45 ஆக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.
Related posts:
அச்சுறுத்தல் ஏதும் கிடையாது – யாழ். படைகளின் கட்டளை தளபதி!
வித்தியா படுகொலை : குற்றவாளிகள் மாட்டியது எப்படி?
அஞ்சல் வாக்களிப்புக்கான இறுதிச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு!
|
|