சீருடை வவுச்சர்களுக்கான கால எல்லை நீடிப்பு!

Saturday, May 18th, 2019

அரச, அரச உதவி பெறும் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச சீருடைகளுக்கான வவுச்சர்களின் செல்லுபடிக்காலம் இம்மாதம் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மே 20 ஆம் திகதிக்குப்பின்னர் எந்தக்காரணத்தைக் கொண்டும் வவுச்சர்களுக்கான காலம் நீடிக்கப்பட மாட்டாது என்பதால் பெற்றோர் இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சு கேட்டுள்ளது.

வவுச்சர்களின் செல்லுபடிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளமை பற்றி வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Related posts: