சீராக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுங்கள் – அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவு!

Wednesday, February 23rd, 2022

தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே அரச தலைவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

அரச தலைவர் தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை அதிகரித்துள்ள போதிலும், மக்களின் நிலைமையை கருத்திற் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்சார சபையிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டதன் காரணமாக பெற்றோலியத்திற்காக வழங்கப்பட்ட 80 பில்லியன் ரூபா கடனை மீளச் செலுத்துவதற்கு நிதியமைச்சு இணங்கியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: