சீரழிந்து கிடக்கும் வடக்கின் கல்வித் தரத்தை தூக்கி நிறுத்துவதே எமது நோக்கம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் ஜெகன் தெரிவிப்பு!

Friday, November 30th, 2018

சீரழிந்து கிடக்கும் வடபகுதியின் கல்வித் தரத்தை மீண்டும் தூக்கிநிறுத்தி எமது எதிர்கால சந்ததியை உறுதிமிக்க கல்வியாளர்களாக உருவாக்குவதே எமது நோக்கம். அத்தகைய இலக்கை எமது மாணவர்கள் எட்டும்வரை அவர்களுக்கு உறுதுணையாக இருந்து செயற்பட நாம் தயாராகவே இருக்கின்றோம் என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகம், நல்லூர்- கல்வியங்காடு சமுதாய சமுர்த்தி வங்கியினால் நடாத்தப்பட்ட கல்வியில் சிறப்புற விளங்கிய மாணவர்களுக்கான “சிப்தொர” புலமைப் பரிசிலும், சமுர்த்தி வங்கியில் சிறப்புற செயற்பட்டவர்களுக்கான பாராட்டு பத்திரம் வழங்கும் நிகழ்வு வாழ்வின் எழுச்சி முகாமையாளர் ந.சிவகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

வடபகுதி மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சி கண்டுள்ள இன்றைய நிலையில் அந்த மாணவர்களுக்கு ஊக்கத்தையும் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்குமாக சமுர்த்தி வங்கியால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வு பாராட்டத்தக்கது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கடும் யுத்த காலத்தில் மக்களின் சேவைக்காக 1998ஆம் ஆண்டளவில் வடக்கு நோக்கி கொண்டுவரப்பட்ட சமுர்த்தி செயற்றிட்டத்தினூடாக யுத்தத்தால் வறுமையில் வாடிய எமது மக்களுக்கு பல்வேறு நன்மைகளை நாம் பெற்றுக்கொடுக்க முடிந்தது.

ஆனாலும் கடந்த நல்லாட்சி அரசின் காலத்தின்போதே நாம் அந்த அரசில் பங்கெடுத்திருக்கவில்லை. இக்காலப்பகுதியில் எமது மக்கள் தமது அடிப்படை தேவைகளை கூட பெற்றுக்கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்ததை அனைவரும் அறிவர்.

தற்போது மீண்டும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக பொறுப்பெற்றுள்ளதால் எமது மக்களின் தேவைப்பாடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான சந்தர்ப்பம் எமக்கு மீண்டும் கிடைத்துள்ளது.

இதனூடாக வறிய மக்களின் வாழ்வாதார மேம்பாடுகள், வீட்டுத்திட்ட உதவிகள்,  சுயதொழிலுக்கான கடன் திட்டங்கள், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளுக்கான கடன் திட்டங்கள், மரணம் அடைந்த மற்றும் காயம் அடைந்தவர்களுக்கான இழப்பீடுகள் சொத்தழிவு இழப்பீடு போன்றவற்றை பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் எம்மிடம் அரசியல் அதிகாரங்கள் அதிகளவில் கிடைக்குமானால் மக்களுக்கான அபிவிருத்தியையும் அதே நேரம் அரசியல் உரிமையையும் வென்றெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பயணிக்க நாம் தயாராகவே உள்ளோம் என்று கூறினார்.

இதன்போது வாழ்வாதாரம், சுயதொழிலுக்கான உதவி, வேலைவாய்ப்பு போன்றவற்றை பெண் தலைமைத்துவம் உள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதுடன் சமுர்த்தி பயனாளிகளுக்கு இதை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்று கட்டுப்பாட்டு சபை உறுப்பினர் கௌசல்யா கோரிக்கை விடுத்தார்.

குறித்த கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டுசென்று அதற்கான தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதாக குகேந்திரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.ஷ

DSCN2041

DSCN2011

DSCN2009

 

Related posts: