சீரற்ற காலநிலை – 14 மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!

Tuesday, December 3rd, 2019

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

14 மாவட்டங்களிலும் 34 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 4,153 குடும்பங்களைச் சேர்ந்த 14,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

அத்துடன் பாதிகபட்டவர்களில் 946 குடும்பங்களை சேர்ந்த 3,149 பேர் 29 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த அனர்த்தத்தில் 5 பேர் பலியானதுடன், 5 பேர் காயமடைந்துள்ளதோடு ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts: