சீரற்ற காலநிலை – நாட்டு மக்களுக்கு விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கடும் எச்சரிக்கை!

Saturday, June 5th, 2021

சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அல்லது வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளவர்கள் தாமதிக்காது செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்

மாறாக அனர்த்தங்கள் ஏற்பட்ட பின்னர் மீட்பு குழுவினர் வரும்வரை காத்திருந்து அவர்களால் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது சிறிய இடங்களில் பெருமளவானோர் ஒன்று கூடக்கூடிய வாய்ப்புள்ளது.

இதன் போது கொவிட் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. எனவே அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளவர்கள் கூடிய விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் கடந்த சில தினங்களாக மூவாயிரத்திற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை பதிவாகியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: