சீரற்ற காலநிலை – நாடு முழுவதும் 2 ஆயிரத்து 750 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரத்து 542 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Saturday, May 15th, 2021

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சபரகமுவ, மேல், வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் 2,750 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 11,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கேகாலை மாவட்டத்தின் வரகாபொலவிலும், காலி மாவட்டத்தின் நாகொடவிலும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.

அந்த அறிக்கையின்படி, வீடுகளுக்கு முழுமையான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆனால் 205 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பில் உள்ள 42 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: