சீரற்ற காலநிலை – நாடளாவிய ரீதியில் மின்சார செயலிழப்பால் 475,000 பேர் பாதிப்பு!

Saturday, July 10th, 2021

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 4 இலட்சத்து 75 ஆயிரம் பேர் மின்சார செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக புத்தளம், குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் பலத்த காற்றுடனான மழை காரணமாக மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில், நீர்மட்டம் அதிகரித்ததால், மேலும் இரண்டு வான்கதவுகள் பின்னர் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.. இந்நிலையில், நீர்த்தேக்கத்திற்கு தாழ்நிலப் பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது

Related posts: