சீரற்ற காலநிலை தொடர்வதால் டெங்கு பரவும் வேகமும் அதிகரிப்பு!

டெங்கு காய்ச்சலினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
நிலவும் மழையுடனான வானிலையினால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக நாளொன்றில் 5 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வந்த நிலையில், தற்போது ஒரு நாளில் 25 இற்கும் அதிகமானவர்கள் அனுமதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, டெங்கு நோய்ப்பரவல் தொடர்பில் பெற்றோரை அதிக கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
சிறு நெல் ஆலையாளர்களை பலபடுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் - அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன!
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினைக்கான தீர்வும் வழங்கப்படும் - ஜனாதிபதி தெரிவிப்பு!
கடந்த 24 மணிநேரத்தில் 1,270 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி!
|
|