சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்!

சீரற்றகால நிலைகாரணமாக இடர்முகாமைத்துவ நிலையத்தால் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாயம் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்தமாதம் இறுதியில் நிலவியசீரற்றகாலநிலைகாரணமாகநாட்டின் பல்வேறுமாவட்டங்களில் கடும்மழைபெருவெள்ளம் மற்றும் மண்சரிவுகாரணமாக மக்களின் இயல்புவாழ்க்கைமுற்றிலும் பாதிக்கப்பட்டது.
இவ்வனர்த்தங்கள் காரணமாக இதுவரையில் 212 பேர் உயிரிழந்ததாகவும், 79 பேரைக் காணவில்லையென்றும் இதுவரையிலானசெய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் 14 ஆயிரத்து 842 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும்,தெரிவிக்கப்படும் அதேவேளை,வெள்ளம் மற்றும் மண்சரிவுஅனர்த்தங்களினால் எற்பட்ட இழப்புசுமார் 30 பில்லியன் (3000 கோடி) என்றும் இதுவரையானதகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதனிடையேசீரற்றகாலநிலைகாரணமாக இடர்முகாமைத்துவநிலையத்தால் ஏழு மாவட்டங்களுக்குவிடுக்கப்பட்டமண்சரிவுஅபாயம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிலையில் மக்களைஅவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|