சீரற்ற காலநிலை – ஆயிரம் ஏக்கர்  நெற்செய்கை அழிவு!

Tuesday, December 25th, 2018

முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை காரணமாக, காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக் கணக்கான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில குளங்கள் உடைப்பெடுக்கும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன என்று முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்தது.

குறித்த திணைக்களத்தின் கீழ் காணப்படும், 9ஆயிரத்து 679ஏக்கர் காலபோக நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயற்காணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 5 குளங்கள் ஆபத்தான நிலையிலுள்ளன. ஒரு நீர்ப்பாசன வாய்க்காலும் சேதமடைந்துள்ளது.

ஒலுமடுக் கமக்கார அமைப்புக்குட்பட்ட 675ஏக்கர் வயல் நிலங்களும், முள்ளியவளை கமக்கார அமைப்பின் கீழ் காணப்படும் 750 ஏக்கர் வயல் நிலங்கள், ஒட்டுசுட்டான் கமக்கார அமைப்பின்கீழ் ஆயிரத்து 656ஏக்கர் வயல் நிலங்கள், துணுக்காய் காமக்கார அமைப்பின் கீழ் 700 ஏக்கர் வயல் நிலங்கள், பாண்டியன்குளம் கமக்கார அமைப்பின் கீழ் 500 ஏக்கர் வயல் நிலங்கள், புதுக்குடியிருப்பு கமக்கார அமைப்பின் கீழ் 4 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள், உடையார் கட்டு கமக்கார அமைப்பின் கீழ் ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள், குமுழமுனை கமக்கார அமைப்பின் கீழ் 250ஏக்கர் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பின் கீழ் காணப்பட்ட வயல் நிலங்கள் ஏற்கனவே பெய்த மழைகாரணமாக அழிவடைந்துவிட்டன.

ஒலுமடு கமக்கார அமைப்பின் கீழ் காணப்படும் புலிமச்சினாதிகுளம், ஒலுமடுக்குளம், தாச்சரங்கன்குளம், முறியாக்குளம் என்பன வான் பாய்கின்றன.

ஒட்டுசுட்டான் கமக்கார அமைப்பின் கீழ் காணப்படும், அம்பகாமம் குளம் குளக்கட்டால் நீர் கசிகின்றது. முள்ளியவளை வடக்குப் பகுதியில் நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

Related posts: