சீரற்ற காலநிலையினால், நாடளாவிய ரீதியில் 7 ஆயிரத்து 61 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு!

Saturday, December 16th, 2023

சீரற்ற காலநிலையினால், நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 271 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, வட மாகாணத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில், ஆயிரத்து 371 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கிழக்கு மாகாணத்தில் 892 குடும்பங்களைச்சேர்ந்த 2 ஆயிரத்து 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தின் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே.திலீபன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தின் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே.திலீபன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாலியாறு, பரங்கியாறு என்பவற்றின் நீர்மட்டமும் உயர்வடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில், மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இரணைமடுக் குளத்தின் 8 வான்கதவுகள் தொடர்ச்சியாக திறந்துவிடப்பட்டுள்ளதாக வட மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் என்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

000

Related posts: