சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

Thursday, May 24th, 2018

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இதனால் நாட்டு மக்களின் விவசாய நடவடிக்கைகள் பாதிப்புற்ற நிலையில் சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெனிக் சந்தையில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தாலும் மலையகப்பகுதிகளில் மரக்கறிகளின் விலை 50 வீதத்தாலும் அதிகரித்துள்ளதாக மெனிக் சந்தை வர்த்தக சங்கத்தின் செயலாளர் காமினி ஹந்துன்கே தெரிவித்துள்ளார்.

அத்துடன் தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: