சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 மாத குழந்தை உயிரிழப்பு – உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படவில்லை என பெற்றோர் குற்றச்சாட்டு!

Monday, August 21st, 2023

உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படாமையினலேயே பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 மாத குழந்தை உயிரிழந்ததாக களனி ௲ திப்பிட்டிகொட பகுதியை சேர்ந்த குழந்தையின் பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.

முன்பதாக காய்ச்சல் காரணமாக குறித்த குழந்தை கடந்த 4 ஆம் திகதி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பொரளை- சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட குறித்த குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்தது.

இந்நிலையில் வைத்தியசாலையில் உரிய சிகிச்சை வழங்கப்படாமையினாலே தமது குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் பொரளை – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளரை குழந்தையின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அதன் பின்னரே அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: