சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கையை வந்தடைந்தார்!

Friday, July 8th, 2016
சீன வெளி­வி­வ­கார அமைச்சர் வோங் ஜீ இரு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

குறித்த விஜ­யத்­தின்­போது ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஆகி­யோரை சந்­தித்து அவர் கலந்­து­ரை­யாட உள்ளார்.

இலங்­கையில் சீன முத­லீ­டு­களை அதி­க­ரித்தல் மற்றும் துறை­முக நகர் திட்­டத்தின் முன்னேற்றங்கள் உள்­ளிட்ட முக்­கிய விட­யங்­களை மையப்­ப­டுத்­தியே அவரின் இலங்கை விஜயம் அமைந்­துள்­ளது.

குறிப்­பாக சீனாவின் முத­லீட்டில் தலை­நகர் கொழும்பில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற பாரிய வேலைத் திட்­டங்­க­ளான துறை­முக நகர் திட்டம் மற்றும் 5 நட்­சத்­திர ஹோட்­டல்கள் தொடர்பில் தனது விஜயத்தின் போது ஆராய உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் உட­னான சந்­திப்பின் போது துறைமுக நகர் திட்டம் குறித்து விஷேடமாக கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: