சீன மக்கள் இராணுவத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Sunday, August 29th, 2021

சீன இராணுவத்துக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

சீன இராணுவத்தினரால் இலங்கையின் முப்படையினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ள நிலையிலேயே அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ருவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச இலங்கைக்கு வந்த சினோபார்ம் தடுப்பூசியின் 3 இலட்சம் டோஸ்களை நன்கொடையாக வழங்கிய சீன மக்கள் இராணுவத்திற்கு நன்றி.

இலங்கையில் தடுப்பூசி இயக்கம் வெற்றிகரமாக இருப்பதை உறுதி செய்ய பெறப்பட்ட உதவிகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: